தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கதவு திறந்தே இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கும் பட்சத்தில் இரண்டிலும் அதிமுக வெற்றிபெறும். கொடநாடு விவகாரத்தில் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நாங்கள் அதிமுக அரசு தயாராக உள்ளது. இவ்விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றம் செய்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். அதிமுகவில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தற்போது வரை தொடங்கப்படவில்லை. கூட்டணிக்கான கதவு திறந்தே இருக்கிறது. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். அரசின் நிதி நிலையை பொறுத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்.

அஜித்திற்கு பாராட்டு

நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என்று நேற்று அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: நடிகர் அஜித் தொழில் பக்தி உள்ளவர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அஜித்தின் தைரியம் பாராட்டத்தக்கது. தனது ஆதரவு யாருக்கும் இல்லை என அஜித் கூறியது துணிச்சலான செயல். திறந்த மனதோடு அஜித் தனது நிலையை கூறியிருக்கிறார். நடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவது எனக்கு பிடிக்கும். என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: