இந்தியாவின் 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்தது நேபாள மத்திய வங்கி

காத்மண்டு: நேபாள மத்திய வங்கி இந்தியாவின் 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் நேபாளத்தில் உள்ள இந்திய சுற்றுலாப்பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் 100 ரூபாய் நோட்டுகளை தவிர 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளை பரிவர்த்தனைக்கு பயன்படுத்த கூடாது என நேபாள மத்திய வங்கி, அந்நாட்டில் உள்ள முக்கிய வங்கிகள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு சுற்றறிக்கை  அனுப்பியுள்ளது. இந்த புதிய உத்தரவின் மூலம் இந்தியாவை தவிர பிறநாடுகளுக்கு இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாள மக்கள் எடுத்து செல்ல முடியாது.

அதேபோல பிற நாடுகளில் இருந்தும் இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாளத்திற்குள் எடுத்துவர முடியாது. இந்தியாவின் 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே அந்நாட்டு மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த திடீர் தடையால் நேபாளம் சென்றுள்ள இந்திய சுற்றுலாப்பயணிகள் அவதிக்கு ஆளாகியிருப்பதாக  கூறப்படுகிறது. இந்திய பிரதமர் மோடி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நேபாள மக்கள் மிகுந்த அவதிக்குள்ளானதாக அந்நாட்டு பிரதமர் சர்மா ஓலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: