அந்தமான், நிக்கோபர் தீவுகளின் தலைநகருக்கு செல்லும் விமானங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை

போர்ட் பிளேர்: அந்தமான், நிக்கோபர் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் விமானப் பயணத்துக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து விமான நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு நாள்தோறும் 6 விமானங்கள் இயக்கப்படுகின்றன. கடற்பரப்பு என்பதால், அடிக்கடி பழுதாகும் பிராட் அண்ட் விட்னி எஞ்சின்கள் கொண்ட விமானங்களை அவ்வழியே இயக்கக் கூடாது என டிஜிசிஏ எச்சரித்துள்ளது.

ஒரு எஞ்சின் கோளாறானாலும், மற்றொரு எஞ்சின் உதவியுடன் ஒரு மணி நேரத்துக்குள் அருகிலுள்ள விமான நிலையத்துக்குச் செல்ல முடியாது என்பதால், இந்த உத்தரவை டிஜிசிஏ வெளியிட்டுள்ளது. இண்டிகோ பிராட் அண்ட் விட்னியை விட பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஏ320 எஞ்சின்களைக் கொண்டும், கோ ஏர் நிறுவனம் பிராட் அண்ட் விட்னி எஞ்சின் அல்லாத பிற எஞ்சின்களைக் கொண்டு விமானங்களை இயக்குகிறது. இருப்பினும், அவ்வழியே பயணிக்கும் தென்கிழக்கு ஆசியா மற்றும், மத்தியக்கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கும் சர்வதேச விமானங்கள் இந்த எஞ்சினை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: