பாரத் மாலா என்ற திட்டத்தின் கீழ் 4,000 கி.மீ புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம்..!

டெல்லி: பாரத் மாலா திட்டத்தின் கீழ் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரத் மாலா என்ற திட்டத்தின் கீழ் 4,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய பசுமை வழிச்சாலைகளையும், மேலும் 3,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலைகளையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் பசுமை வழிச்சாலைகளாகவே அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாட்னா-ரூர்கேலா, ஜான்சி-ராய்புர், சோலாப்பூர்-பெல்காம், பெங்களூர்-கடப்பா-விஜயவாடா, கோரக்பூர் -பரேலி , வாரணாசி -கோரக்பூர் சாலைகள் இந்தத் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த விரைவுச்சாலையில் பயணிக்கும் கார்களுக்கு வேகக் கட்டுப்பாடு மணிக்கு 120 கிலோமீட்டர் என்றும் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இது குறித்த ஆய்வை மேற்கொண்டு வரும் தேசிய நெடுஞ்சாலைத்துறை முக்கிய வனப்பகுதிகள், வனவிலங்கு சரணாலயங்கள் குறித்த விவரங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக சேகரித்து வருகிறது. இந்தியாவில் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகவும் தடையற்ற போக்குவரத்தை ஏற்பாடு செய்யவும் இத்திட்டம் பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: