காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி கைது: போதையில் பைக் ஓட்டி அபராதம் கட்டியதால் ஆத்திரம்

ெசன்னை: மது அருந்திவிட்டு பைக் ஓட்டியதற்காக அபராதம் விதித்ததால் போக்குவரத்து போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதல்வர் வீட்டில் வெடிகுண்டு  வைத்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டும், போலீசாரை மிரட்டிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். சென்னை முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை  போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை  தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, ஆலந்தூர் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா (45) என்பதும், மது அருந்தி இருந்ததும் தெரியவந்தது. எனவே சிக்கந்தர் பாட்ஷாவுக்கு போலீசார் அபராதம்  விதித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிக்கந்தர் பாட்ஷா உடனே, காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘மது அருந்திவிட்டுதான் பைக் ஒட்டி வந்தேன். ஊழல் செய்பவர்கள்,  ஏமாற்றுபவர்களை எல்லாம் விட்டு விடுங்கள். என் கஷ்டத்தை மறக்க நான் மது அருந்தியுள்ளேன். இதற்கு அபராதம் விதிக்கிறார்கள்’’ என்று, பலமுறை போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார்.  அப்போது, ‘‘முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?’’ என்று மிரட்டவும் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு  செய்து சிக்கந்தர் பாட்ஷாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: