முதல் ஒருநாள் போட்டி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

போர்ட் எலிசபெத்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.செயின்ட் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்ட்யில் (பகல்/இரவு), டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 266 ரன் குவித்தது. ஹெண்ட்ரிக்ஸ் 45 ரன், வான் டெர்  டஸன் 93 ரன் (101 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர்.  தொடக்க வீரர் ஹாஷிம் அம்லா 108 ரன் (120 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் மில்லர் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல்இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன் எடுத்து வென்றது. இமாம் உல் ஹக் 86 ரன் (101 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), பகார் ஸமான் 25, பாபர் ஆஸம் 49, சோயிப் மாலிக் 12, கேப்டன்  சர்பராஸ் அகமது 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். முகமது ஹபீஸ் 71 ரன் (63 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஷதாப் கான் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர்.முகமது ஹபீஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி டர்பனில் நாளை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: