உலகம் பலவிதம்

சீனர்களுக்காக அழகிய ஊதுபத்தி:

சீனாவின் பாரம்பரிய நாட்காட்டியான லூனாரின்படி, புத்தாண்டு தினம் அடுத்த மாதம் 5ம் தேதி பிறக்க உள்ளது. புத்தாண்டு தினத்தில், சீனர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். அதற்காக, வியட்நாமின் ஹனாய் மாநிலத்தில் உள்ள குயாங் காவ் கிராமத்தில் சிவப்பு வண்ணத்தில் அழகிய ஊதுபத்திகள் செய்யும் பணியில் பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

பலத்தை காட்டும் தைவான்:

‘தைவானை மீண்டும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கு தேவைப்பட்டால் ராணுவமும் பயன்படுத்தப்படும்’ என சீனா மிரட்டல் விடுத்த நிலையில், தைவானின் தாய்சங் பகுதியில் 2 நாள் போர் ஒத்திகை நடத்தப்பட்டது. சீனாவுக்கு தங்களின் ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் நடந்த இப்போர் பயிற்சியில் இலக்குகளை நோக்கி சீறிப்பாயும் ஏவுகணை. எத்தகைய போர் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தைவான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கால்நடை அணிவகுப்பு:

அமெரிக்காவின் கொலோரடோ மாகாணத்தின் டென்வர் நகரில், தேசிய மேற்கத்திய கால்நடை கண்காட்சி கடந்த 1906ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கண்காட்சியையொட்டி, ‘கவ் பாய்’ வேடமணிந்தவர்கள் குதிரையில் அமர்ந்தபடி, சாலையில் மாடுகளை அணிவகுத்து அழைத்துச் செல்கின்றனர்.

துப்புரவில் நவீனமயம்:

சீனாவின் இன்னர் மங்கோலியாவில் உள்ள ஹோஹாட் நகரின் பல்கலைக்கழகத்தில்,தானியங்கி இயந்திரம் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை சிறுமி ஒருவர் ஆச்சரியமுடன் பார்க்கிறார். பல நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், எந்த பிற உத்தரவுகளும் இன்றி தானாக சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: