நிரவ் மோடி மோசடி 2 வங்கி இயக்குனர் டிஸ்மிஸ்

மும்பை: ரூ.14,000 கோடி கடன் மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பி ஒடிய தொழிலதிபர் நிரவ் மோடிக்கு உடந்தையாக இருந்த  பஞ்சாப் நேஷனல் வங்கி செயல் இயக்குனர்கள் இரண்டு பேரை மத்தி அரசு டிஸ்மிஸ் செய்துள்ளது. விஜய் மல்லையா ரூ.9,000 கோடி மோசடி செய்து தப்பி ஓடிய விவகாரத்தை அடுத்து, கடந்தாண்டு ஜனவரி மாதம் தொழிலதிபர் நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கி ெவளிநாடு தப்பிய விவகாரம் வெளியே தெரிந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.

 இந்த நிலையில், நிரவ் மோடி கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குனரகள் வீர பிரம்மஜி மற்றும் சஞ்சீவ் சரண் ஆகிய இருவரையும் மத்திய அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளது.   இவர்களில் வீர பிரம்மஜி ராவ்  வரும் 22 ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாளுக்கு முன் நீக்கப்பட்டார். இதுபோல, சஞ்சீவ் சரண், வரும் மே மாதம் ஓய்வு பெற வேண்டும். அவரும் இப்போது இயக்குனர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: