பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாட தயார்...

மெல்போர்னில் நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், கேதார் ஜாதவுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 121 ரன் சேர்த்து வெற்றிக்கு உதவிய டோனி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இது குறித்து டோனி கூறுகையில், ‘பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் களமிறங்கத் தயாராக உள்ளேன். 14 ஆண்டு கால அனுபவம் உள்ள நிலையில் 6வது வீரராகக் களமிறங்க மாட்டேன் என்று எப்படி சொல்ல முடியும். அணியின் தேவைக்கேற்ப விளையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி. மெல்போர்ன் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இல்லை. அதனால் விரும்பியபடி அடித்து விளையாடுவதில் சிரமம் இருந்தது. ஆஸி. பந்துவீச்சும் சிறப்பாக இருந்ததால், தேவையில்லாமல் அடித்து விக்கெட்டை இழப்பதை விட... கடைசி வரை களத்தில் நின்று இலக்கை எட்ட முடிவு செய்தோம். மறுமுனையில் கேதார் ஜாதவ் அபாரமாக பேட் செய்தது நெருக்கடியை வெகுவாகக் குறைத்துவிட்டது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: