புதிய மின் திட்டங்களில் இந்திய தயாரிப்பு கருவிகள் வாங்குவது இனி கட்டாயம்

புதுடெல்லி: புதிய மின் திட்டங்களில் இந்திய தயாரிப்பு கருவிகளை பயன்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.மின் திட்டங்களில் உள்நாட்டு கருவிகளை பயன்படுத்துவதை கட்டாயம் ஆக்குவது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதத்திலேயே மத்திய அரசு பரிசீலிக்க தொடங்கியது. இதன்படி அனல் மின் உற்பத்தி, ஹைட்ரோ திட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுளளன. இதில் அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள், பகிர்மான கழகங்கள் உள்நாட்டு கருவிகளை புதிய திட்டங்கிளல் பயன்படுத்த வேண்டும். ஹைட்ரோ திட்டங்களை பொறுத்தவரை குறைந்த பட்சம் 50 சதவீத கருவிகள் மற்றும் பொருட்களை உள்நாட்டு உற்பத்தியாக இருக்க வேண்டும். 5 ஆண்டுகளில் இது 75 சதவீதமாக உயர்த்தப்படும்.

அனல் மின் நிலையங்களில் 70 சதவீத உபகரணங்களும், பணி மற்றும் சேவை ஒப்பந்தங்களில் 90 சதவீத கருவிகளும் உள்நாட்டு உற்பத்தியாக இருப்பது கட்டாயம் ஆகிறது.  கடந்த 2017ம் ஆண்டிலேயே தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை உத்தரவுப்படி மின்சக்தி அமைச்சக கொள்முதலில் 50 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள டெண்டர்களில் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பது கட்டாயமாக இருந்தது. உள்நாட்டு கொள்முதல் கட்டாயம் ஆக்கப்படுவது மேக் இன் இந்தியா திட்டத்தின்படி வரவேற்கத்தக்கதுதான். இதுபோல் 50 லட்சம் ரூபாய் என்பது மிக குறைந்த பட்ச வரம்பாக உள்ளது. இதனை 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று இந்திய மின்சார மற்றும் மின்னணு உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: