குஜராத், சீனா பம்ப்செட் விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு : கோவை குறு, சிறு உற்பத்தியாளர்கள் பாதிப்பு

கோவை: சீனா, குஜராத் பம்ப்செட்கள் விற்பனை தமிழகத்தில் அதிகரித்துள்ளதால், கோவையிலுள்ள குறு, சிறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது:மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக கோவை மோட்டார் பம்ப்செட்களின் விலை அதிகரித்தாலும், நீடித்து உழைக்கும் திறன் கொண்டது. ஆனால், குஜராத் மற்றும் சீன மோட்டார் பம்ப்செட்கள் விலை குறைவாக இருந்தாலும், நீடித்து உழைப்பதில்லை. ஆனால், விலை குறைவு காரணமாக, குஜராத் மாநிலம் மற்றும் சீனா மோட்டார் பம்ப்செட்களின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

தற்பொழுது நாங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் லாபம் கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது. இந்நிலையில்,  குஜராத், சீன மோட்டார் பம்ப்செட்களோடு போட்டி போட வேண்டுமானால்  நஷ்டத்திற்கு தான் விற்க வேண்டும். வர்த்தக போட்டி காரணமாக, கோவையில்  மோட்டார் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறையும் நிலை  ஏற்பட்டுள்ளது. கோவையில் மோட்டார் பம்ப்செட் மூலப்பொருள் வங்கியை உருவாக்க  வேண்டும். ஜிஎஸ்டியில் பம்ப்செட் மூலப்பொருள் மீதான வரியை குறைக்க  வேண்டும், தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தேவையான மோட்டார்  பம்ப்செட்களில் 60 சதவீதத்தை கோவையிலுள்ள குறு, சிறு பம்ப்செட்  உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: