மாசு ஏற்படுத்திய விவகாரம்...... வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

டெல்லி: வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக மாசுக்களை பாதுகாப்பற்ற முறையில் வெளிப்படுத்தியதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நாளை மாலை 5 மணிக்குள் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், அப்படி அபராதம் செலுத்த தவறினால் வோக்ஸ்வேன் நிறுவனத்தின் இந்திய மேலாண் இயக்குனர் கைது செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு சொந்தமாக, இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரித்த கார்கள் அதிகளவு மாசு ஏற்படுத்தியதால் இவ்வாரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: