குமாரசாமி தான் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார்: எடியூரப்பா குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமி குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் தங்கள் வசம் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜக முயற்சித்து வருவதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்களை, முதல்வர் குமாரசாமி இழுக்க முயற்சிப்பதாக கூறி, கடந்த 3 நாட்களாக டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ஓட்டல்களில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டிருந்தனர். இந்லையில், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபோன்று எதுவும் நேற்று நடைபெறவில்லை.

இதனிடையே, “அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை. எனது பலம் என்ன என்பது எனக்கு தெரியும். கூட்டணி அரசு வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. எனவே கவலைப்பட தேவையில்லை. இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பாஜக-வுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவிப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது? என்று குமாரசாமி கூறியிருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, ” நாங்கள் யாரையும் இழுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. குதிரை பேரத்தில் குமாரசாமிதான் ஈடுபடுகிறார். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. பணம் தருவதாகவும் அமைச்சர் பொறுப்பு தருவதாகவும் கூறி முதல்வர் குமாரசாமி தான் எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிக்கிறார்” என்று எடியூரப்பா குற்றம் சாட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: