ஐகோர்ட் உத்தரவுப்படி ஆடம்பர விழா ஏதுமின்றி சென்னை மெரினாவில் திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு

சென்னை: சென்னை மெரினா சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு, ஆடம்பர விழா ஏதுமின்றி திறக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அரசு சார்பில் ரூ.2.52 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்றன. பாதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை எதிர்த்து வழக்கறிஞர் தினேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மெரினா சாலையில் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, எம்ஜிஆர் வளைவை திறக்கக்கூடாது என கூறியிருந்தார். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் வளைவு அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதலில் வளைவை திறக்க தடை விதித்தனர். பின்னர், ஆடம்பர விழாவாக நடத்தாமல் 5 நிமிட நிகழ்ச்சியாக மெரினாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்கலாம் என அனுமதி அளித்தனர்.  இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு கட்டுமான பணிகள் முடிவடைந்ததையடுத்து, ஆடம்பர விழா ஏதுமின்றி நூற்றாண்டு வளைவு இன்று திறக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: