மேகாலயா சுரங்க விபத்து...... 32 நாட்களுக்கு பின் ஒருவர் உடல் மீட்பு: எஞ்சியுள்ள 14 பேரை தேடும் பணி தீவிரம்

ஈஸ்ட் ஜைந்தியா: மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. ஈஸ்ட் ஜைந்தியா மலை அடிவாரத்தில் 200 அடி ஆழத்தில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. சுரங்கத்தில் சிக்கிய 15 பேரில் 32 நாட்களுக்கு பிறகு ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேகாலயாவின் ஈஸ்ட் ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சைபுங் என்ற பகுதியில் கடந்த டிசம்பர் 13ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்ட எலிப் பொந்து என அழைக்கப்படும் 3 முதல் 4 அடி உயர சுரங்கத்துக்குள் 15 தொழிலாளர்கள் நிலக்கரி எடுக்கச் சென்றனர்.

அவர்கள் திரும்பும் முன்பு அதே போன்று தோண்டப்பட்டு கைவிடப்பட்ட சுரங்கங்கள் வழியாக அருகிலிருந்த நதியின் வெள்ளம் உட்புகுந்தது. இதனால் அவர்களை மீட்க முடியாமல் மீட்புப்படையினர் கடந்த ஒரு மாதமாக திணறி வந்தனர். இந்நிலையில் இன்று சுரங்கத்தில் இருந்து ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டது. 32 நாட்களுக்கு பிறகு ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 14 பேரும் உயிரிழந்திருக்கக் கூடம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: