உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக துவங்கியது

மதுரை: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூரில் உள்ள கோட்டை முனியசாமி கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,400 காளைகள் முன்பதிவு  செய்யப்பட்டுள்ளன. 848 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று காலை 7.50 மணிக்கு மதுரை கலெக்டர் நடராஜன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 75 பேர் வீதம் வீரர்கள் களமிறக்கப்பட உள்ளனர். பொதுமக்கள் பார்ப்பதற்காக பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க 10க்கும் மேற்பட்ட இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்க்க ஏதுவாக 5 இடங்களில் டிஜிட்டல் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. 7 ஏ.எஸ்.பி.க்கள், 15 டி.எஸ்.பி.க்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முதன்முறையாக இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: