ஆன்லைனில் அமோக லாபம் தேங்காய் சிரட்டைக்கு அடித்தது ஜாக்பாட்

புதுடெல்லி: இயற்கை பொருட்கள் பல கலை வடிவம் பெற்று மதிப்புக்கூட்டு பொருளாக மாறிவிடுகின்றன. இவற்றுக்கு விலை எக்கச்சக்கம். இவற்றில் கொட்டாங்கச்சி எனப்படும் தேங்காய் சிரட்டைக்கு ஏக மவுசு ஏற்பட்டுள்ளது.  இயற்கையான தேங்காய் சிரட்டை கப் என்ற பெயரில் ஆன்லைனில் ₹1,200க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. சிலர் ₹2,000க்கு மேல் கூட விற்பனை செய்கின்றனர். தேங்காய் சிரட்டைக்கு பெயின்ட் அடித்து அல்லது கலைப்பொருளாக மாற்றியெல்லாம் விற்கப்படவில்லை. வழக்கமாக தேங்காய் சிரட்டை எப்படி இருக்குமோ அப்படியே எந்த வடிவ மாற்றமும் இல்லாமல் விற்பனை  செய்கின்றனர். சிரட்டையில் ஒட்டியுள்ள நார் மட்டும் சற்று உரசி எடுத்து வழவழப்பாக மாற்றப்பட்டுள்ளது.

 இயற்கை பொருட்களை விரும்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தேங்காய் சிரட்டையை தள்ளுபடி போக ₹1,300க்கு வாங்கியதாக பதிவு செய்துள்ளனர். கடைகளில் தேங்காய் 20 முதல் 30 ரூபாய்க்கு  விற்கப்படுகிறது. ஆனால், இதை விட பல மடங்கு மதிப்புடையதாக தேங்காய் சிரட்டை மாறியிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் தேங்காய் சிரட்டையை கலைவடிவ பொருட்களாக மாற்றி விற்பனை  செய்கின்றனர். உண்மையிலேயே இது தேங்காய் சிரட்டைக்கு அடித்த ஜாக்பாட்தான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: