மதுரை மாவட்டம் பாலமேட்டில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணி அளவில் நிறைவு: 49 பேர் காயம்

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில்  காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணி அளவில் நிறைவடைந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 602 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் 48 பேர் காயமடைந்தனர். நேரமின்மை காரணமாக 125 காளைகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேரும் காயம் அடைந்த 13 பேர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர். மேலும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 49 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிர் ஜல்லிக்கட்டு போட்டியின் 3-வது சுற்று நிறைவில் காளை முட்டியதில் 28 பேர் காயமடைந்துள்ளனர். இதில் மாடுபிடிவீரர்கள் மற்றும் பார்வையாளர் உட்பட 4 பேர் காயம் அடைந்த நிலையில் 13 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 6 பேர் முதலுதவிக்குப் பின்னர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  ஜல்லிக்கட்டு போட்டியின் 2-வது சுற்றில் காளை முட்டியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். காளை முட்டியதில் மார்பில் பலத்த காயமடைந்த சூர்யா என்பவருக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள், மற்றும் மருத்துவக் குழு பணி உள்ளிட்டவை குறித்து மத்திய கண்காணிப்புக்குழு உறுப்பினர் எஸ்.கே.மிட்டல், ஆட்சியர் நடராஜன் ஆய்வு நடத்திய பின்னரே ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் 9 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 9 வீரர்களும் மருத்துவ சோதனையில் தேர்வாகததாதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் 739 மாடுபிடி விரர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியின் 8 சுற்றுகளில் 568 காளைகள் உள்பட 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மேலும் ஒரு சுற்றுக்கு 45 நிமிடம் என்ற கணக்கில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிவில் மொத்தம் 8 சுற்று நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: