புதிய இன்ஜினுடன் வருகிறது ராயல் என்பீல்டு ஹிமாலயன்

அட்வென்ச்சர் ரக மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. குறிப்பாக, இமயமலையில் சாகச பயணம் மேற்கொள்வோருக்காகவே இந்த மாடல் உருவாக்கப்பட்டு,  களமிறக்கப்பட்டது. இரட்டை சிலிண்டர் அமைப்புடைய புதிய 650 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு  இருக்கும். புதிய இன்ஜினை பொருத்தும் விதத்தில், ஹிமாலயன் 650 சிசி மாடலில் சில டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

நீடித்த உழைப்பை வழங்கும் தரமான உதிரிபாகங்கள் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் ஆப்ஷனுடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இப்புதிய மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 650 மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ₹3 லட்சம் ஆரம்ப விலையில்  எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர எடை வகை பிரிவு மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 650 மாடல் மிக சிறந்த தேர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: