இந்தியாவில் களம் இறங்குகிறது பிஎஸ்ஏ டிஎஸ்- 7 கார்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் வர்த்தகத்தை மீண்டும் துவங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, பிஎஸ்ஏ குழுமத்தின் சிட்ரோவன் நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிஎஸ்  பிராண்டில் முதல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், டிஎஸ் பிராண்டின் டிஎஸ்-7 கிராஸ்பேக் எஸ்யூவி ரக கார் மாடலானது இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் மிக கவர்ச்சியாக இருக்கும் இப்புதிய கார் பிஎஸ்ஏ குழுமத்தின் EMP2 பிளாட்பார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மாடலானது கிராஸ்ஓவர் ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில், 2.0  லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் மாடலிலும் வரும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  இப்புதிய கார், சொகுசு ரக கார்களுக்கு இணையான ரகத்தில் நிலைநிறுத்தப்படும். அதாவது, இந்தியாவில் ஆடி கியூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 ஆகிய சொகுசு ரக மாடல்களுடன் போட்டி போடும்.

₹600 கோடி முதலீட்டில் ஓசூரில் அமைக்கப்பட இருக்கும் பிஎஸ்ஏ குழுமத்தின் ஆலையில்தான் இப்புதிய கார் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கான இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்கள் ஓசூரில்  அண்மையில் திறக்கப்பட்ட ஆலையிலிருந்து சப்ளை பெறப்படும். இந்த ஆலை ஆண்டுக்கு 3 லட்சம் டிரான்ஸ்மிஷன்களையும், 2 லட்சம் பிஎஸ்-6 மாசு தர இன்ஜின்களையும் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. பிஎஸ்ஏ  குழுமத்தின் கீழ் சிட்ரோவன், வாக்ஸ்ஹால், ஓபெல் மற்றும் பீஜோ ஆகிய கார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சிட்ரோவன் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் டிஎஸ் பிராண்டில் முதல் கார் மாடலை  இந்தியாவில் பிஎஸ்ஏ குழுமம் மிக விரைவில் களமிறக்க உள்ளது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: