ஓரா ஆர்1 - அசத்தும் எலெக்ட்ரிக் கார்

எலெக்ட்ரிக் வாகனங்களின் மொத்த விலையில், சுமார் 40 சதவீத தொகையானது பேட்டரிகளுக்கே சென்றுவிடுகிறது. இதன் காரணமாகவும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே,  மலிவான விலையில் தரமான எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஓரா ஆர்1 (Ora R1) எலெக்ட்ரிக் கார், உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் விலையும், அதில் இடம்பெற்றிருக்கும்  அட்டகாசமான சிறப்பம்சங்களும்தான் இதற்கு மிக முக்கிய காரணம். இந்த எலெக்ட்ரிக் காரின் விலை வெறும் 6 லட்சம் ரூபாய் மட்டும்தான். இதன்மூலம் உலகின் மிக மலிவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் என்ற  பெருமையை இது பெற்றுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் இன்னும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த காரில், 35-kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 194  மைல்கள் வரை பயணிக்க முடியும். அதாவது 312 கிலோ மீட்டர் வரை மிக தாராளமாக பயணம் செய்யலாம்.இந்த காரின் உரிமையாளர், ‘’ஹலோ ஓரா...’’ (Hello Ora) எனக்கூறினால், இந்த கார் ஸ்டார்ட் ஆகிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் சீன நிறுவனங்களுடன்  கூட்டு வைக்க தொடங்கியுள்ளன. இதன் அடிப்படையிலேயே பிஎம்டபிள்யூ நிறுவனம், கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது.இதே 6 லட்சம் ரூபாய்க்கு ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு விற்பனைக்கு வந்தால் சக்கைப்போடு போடும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்ைல.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: