கைவிரல் ரேகை வைத்தால் கார் கதவு திறக்கும்

மொபைல்போன்களில் கை விரல் ரேகையை பயன்படுத்தி திரையை திறப்பதுபோல், உரிமையாளரின் விரல் ரேகையை வைத்து கார் கதவுகளை திறக்கும் வசதியை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. முதலாவதாக, ஹூண்டாய் சான்டா பீ எஸ்யூவி ரக காரில் இப்புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.அதுவும், குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த கை விரல் ரேகை மூலமாக கார் கதவுகளை திறக்கும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்பிறகு, பிற நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும்.

வெறும் கார் கதவுகளை திறப்பதற்கு மட்டுமல்ல, காரை ஸ்டார்ட் செய்வதற்கும் இது உதவியாக இருக்கும். அத்துடன், காரின் மெமரி பங்ஷன் அடிப்படையில் இருக்கையையும் அட்ஜெஸ்ட் செய்துவிடும். மேலும், கை விரல் உரியவருக்கு ஏற்றவாறு பதிவு செய்யப்பட்டிருக்கும் விதத்தில், ஸ்டீயரிங் வீல், சைடு மிரர்களையும் சரியான கோணத்தில் திருப்பி வைத்துவிடும். பதிவின் அடிப்படையில் சரியான அளவில் காருக்குள் வெப்பநிலையையும் பராமரிக்கும். கார் கதவில் கைப்பிடிக்கு அருகில் இருக்கும் சென்சாரில் விரல் ரேகையை பதிவு செய்தால், கார் கதவு திறந்துகொள்ளும். இது நிச்சயம் உரிமையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை அளிக்கும்.

இந்த தொழில்நுட்பம் மிகவும் உயரிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருப்பதாகவும், இதன் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை திருடர்களால் முறியடித்து திறக்க முடியாது என்றும் ஹூண்டாய் கூறுகிறது. சாதாரண சாவி மற்றும் ஸ்மார்ட் சாவியைவிட இந்த கை விரல் ரேகை சாவி தொழில்நுட்பம் மிக உயரிய பாதுகாப்பை வழங்கும். இவ்வகை மாடல் கார், இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: