ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய சன் பவுண்டேஷன் 25 லட்சம் நிதி உதவி

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சன் பவுண்டேஷன் ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாகத் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, முதுகு தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, பெங்களூரில் உள்ள பகவான் மகாவீர் ஜெயின் மருத்துவமனைக்கு சன் பவுண்டேஷன் ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, மருத்துவமனை தலைவர் பூல்சந்த் ஜெயின், துணைத் தலைவர் மோகன்லால், செயலாளர் கிஷன்லால் உள்ளிட்டோரிடம் சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன் நேற்று வழங்கினர். சமூக நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் இதுவரை சுமார் ரூ.56 கோடி நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: