சென்னையில் மீண்டும் டெங்கு : காய்ச்சலால் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்பட பல்வேறு விதமான காய்ச்சல்களால் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிலர் இறந்தனர். இதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லை.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 100க்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனை, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பால் 100க்கும் அதிகமானோர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம், பனி ெபாழிவு காய்ச்சல் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால்    தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், மழை பொழிவால் மீண்டும் டெங்கு பரவக்கூடிய சூழல் உள்ளது.இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: