அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசி மீது டிச. 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி வீடியோ கான்பரன்சில் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் ஜெஜெ டிவிக்கு கடந்த 1996-97ம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததுள்ளதாக புகார் எழுந்தது. அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள், சசிகலா, பாஸ்கரன், ஜெஜெடிவி ஆகியோர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா மீது கடந்த ஆண்டு சிறையில் இருந்தே விடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பதிவில் கையெழுத்திடவில்லை. மேலும் வழக்கு விசாரணையும் சரியாக நடக்கவில்லை. என்று கூறி அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் நேரில் ஆஜர்படுத்த வேண்டாம் என்று கூறி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் நீதிபதியிடம் வழங்கப்பட்டது. அதனை படித்து பார்த்த நீதிபதி, சசிகலா மீது வரும் 20ம் தேதி வீடியோகான்பரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று உத்தரவிட்டு, அதற்கான அனுமதி கடிதத்தை பெங்களூர் சிறைக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: