சென்னை ஐஐடி விடுதியில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தனி கை கழுவும் இடம், தனி பாதை

சென்னை: சென்னை ஐஐடி விடுதி உணவுக்கூடத்தில் அசைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தனி கை கழுவும் இடம், தனி பாதை அமைத்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் சைவ, அசைவ, சுத்த சைவ உணவு சாப்பிடுவோர் என 3 வகையான உணவு நடைமுறைகளை நிர்வாகம் பின்பற்றி வருகிறது. இதில் சுத்த சைவம் என்பது வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளாத மாணவர்கள். இதில் சைவ உணவு உண்பவர்களுக்கு என தனி விடுதி, உணவுக்கூடம் உள்ளது. அதே நேரத்தில் பொது உணவுக்கூடமும் உள்ளது. பொது உணவுக்கூடத்தில் எல்லா மாணவர்களும் அமர்ந்து உணவு சாப்பிடலாம்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த சூரஜ் என்ற ஆராய்ச்சி மாணவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக கடுமையாக தாக்கப்பட்டார். ஐஐடி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவர் தாக்கப்பட்டதற்கு அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு  கண்டனம் தெரிவித்தது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் ஐஐடிக்குள் செயல்படுவதற்கு தடை விதித்தது. இந்நிலையில் ஐஐடி விடுதி பொது உணவுக்கூடத்தில் சைவ உணவு சாப்பிடுவோர், சுத்த சைவ உணவு சாப்பிடுவோர், அசைவம் சாப்பிடுவோர்க்கு தனித்தனி கை கழுவும் இடம், தனித்தனி பாதையை உருவாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது நவீன தீண்டாமை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: