லாரி இடித்து வீடு, 2 கடைகள் சேதம்: ராட்சத பெருமாள் சிலை கொண்டு செல்வதில் சிக்கல்

திண்டிவனம்: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளார் அருகில் உள்ள கொரக்கோட்டை என்னும் ஊரில் உள்ள மலையில் 64 அடி உயரம், 26 அடி அகலம், 380 டன் எடையில், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராமசாமி சிலை உருவாக்கப்பட்டது. இது பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதிக்கு 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது.

இந்த ராட்சத லாரி நேற்று காலை திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுப்பேட்டையை  கடக்க முயன்றது. அப்போது சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் இடியும் சூழ்நிலை உருவானது. இதில் சில கடைகளும், வீடுகளும் இடிந்து விழுந்தன. மேலும், ஒரு கடை மற்றும் வீடும் அதற்கு எதிர் திசையில் கடைக்கும் இடையில் லாரி சிக்கியதால் 2 கடையும் சேதமடைந்தது. இதையடுத்து, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் டி.எஸ்.பி. திருமால், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பிறகு சம்பந்தப்பட்ட நிர்வாகம் பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கியதாலும் இனி பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்பு சிலை அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. இதன்காரணமாக வேலூர் வந்தவாசி மார்க்கமாக சென்னைக்கும் சென்னை மார்க்கமாக  வந்தவாசிக்கும் செல்லும் அனைத்து வாகனங்களும் நேற்று முழுவதும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: