ராஜஸ்தானில் அசோக் கெலாட் முதல்வராக தேர்வு, சச்சின் பைலட் துணை முதல்வர்: காங்கிரஸ் அறிவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான வேணுகோபால் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வராக 3-வது முறையாக அசோக் கெலாட் பதவியேற்க உள்ளார். 199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளை கைப்பற்றியது. 6 தொகுதிகளை வென்ற பகுஜன் சமாஜ் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. இத்தேர்தலில் பாஜக 73 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

அசோக் கெலாட் ராஜஸ்தானின் சர்தர்புரா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர் ஆவார். அசோக் கெலாட் ஏற்கனவே 2 முறை முதல்வராக பதவியில் இருந்துள்ளார். காங்கிரசின் தலைவராக ராஜீவ் காந்தி இருந்தபோது, அவரால் அசோக் கெலாட் அடையாளம் காணப்பட்டவர். தற்போது 67 வயதாகும் கெலாட் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சச்சின் பைலட் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போபாலில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கமல்நாத் ஒருமனதாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைக் காங்கிரஸ் கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், கமல்நாத்துக்கு முதல்வர் பதவியை சிந்தியா விட்டுக்கொடுத்துள்ளார். அவர் துணை முதல்வராகப் பதவியேற்கலாம் எனக் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: