அணை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: அணை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அணை பாதுகாப்பு சட்டம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவினை நிறைவேற்ற கூடாது. அதுதொடர்பாக அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். அதனால் அதனை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் தற்போது பல்வேறு விதமான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. அணைகளின் பாதுகாப்பை தற்போது மாநில அரசுகளே பார்த்துக்கொண்டிருக்கின்ற  சூழ்நிலையில் மத்திய அரசு அதற்காக மசோதா நிறைவேற்றும் பொழுது மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்றும் அதிகாரிகள் அங்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசானது தமிழக அரசினை கலந்தாலோசித்த பின்னரே இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இந்த மசோதா தொடர்பாக இதற்கு முன்பாகவே சில கடிதங்களை எழுதியுள்ளதாகவும் ஏனெனில் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ்தான் அணைகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செல்லும்போது மாநில அரசின் உரிமைகள் பாதுகாக்கப்படாது. மேலும் வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் அணைகளின் பாதுகாப்பை முழுமையாக பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டி கடிதம் எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் உடனே திரும்பப்பெறுமாறு பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். மாநிலத்துக்கு சொந்தமான அணையை பராமரிக்கும் உரிமை மசோதாவில் மறுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியார், பரம்பிக்குளம், தூணக்கடவு, அணைகள் தமிழகத்துக்கு சொந்தம். பக்கத்து மாநிலங்களில் அமைந்துள்ள இந்த அணைகளை தமிழக அரசு பராமரிக்கிறது. இந்நிலையில் அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்தின் உரிமையை பறிப்பதாக உள்ளது. தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் தான் அணைகளை பராமரிக்கும் என்பது சரியல்ல என்றும் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி உள்ள மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: