8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டம்

சேலம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். புதிதாக நிலம் எடுக்கவும் அவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் முகாமிட்டு பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார். இதையடுத்து நேற்று நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி 8 வழிசாலையானது சர்வதேச தரத்தில் நிறுவப்படும் என்று விழாவில் பேசியுள்ளார். கடந்த 6 மாதங்களாக 8 வழிச்சாலை தொடர்பாக மக்கள் போராடி வருகின்றனர். 8 வழிச்சாலை திட்டம்  விவசாய நிலங்களை அழித்துவிடும் என்பதால் மக்கள் அதனை எதிர்த்து போராடி வருகின்றனர். சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி என்ற பகுதியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தை நடத்த காவல்துறையினர் அனுமதி தர மறுத்துள்ளனர்.

ஆனால் தாங்கள் இந்த போராட்டத்தை நடத்துவோம் என்று பொது மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டுள்ளனர். 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த கூடாது, விளைநிலங்களை பாதிக்கும் அந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பொது மக்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6 மாதமாக இந்த திட்டத்தை கைவிட கோரி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ள நிலையில் நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: