மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி : மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் அணை கட்ட பூர்வாங்க திட்ட அறிக்கை தயார் செய்ய தடையில்லா சான்றிதழ் வழங்கிய மத்திய நீர்வள ஆணையத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை மத்திய நீர்வள ஆணையம் உடனடியாக திரும்பப்பெற உத்தரவிடக் கோரியும், கர்நாடக அரசு தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நீராதார உரிமைகளை பாதுகாத்திட புதுச்சேரி அரசு நிர்வாக, சட்ட ரீதியாக எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கும் விதமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: