திருமங்கலம் அருகே 6 மாதத்தில் இடிந்த தடுப்பணை : விவசாயிகள் அதிருப்தி

திருமங்கலம்: திருமங்கலம் அருகே ரூ.5 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் திரளி கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை 6 மாதத்திற்குள் இடிந்ததது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட நடுவக்கோட்டை அருகே கவுண்டமாநதியில் திரளி கண்மாய்க்கு செல்லும் வாறுகால் செல்கிறது. இதனை தூர்வாரிய அதிகாரிகள் கவுண்டமாநதியின் தண்ணீரினால் நடுவக்கோட்டை கிராமத்தில் நிலத்தடிநீர் மட்டம் உயரவேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தடுப்பணை கட்டினர். ரூ. 5 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் அச்சம்பட்டி அரசுபள்ளி அருகே இந்த புதிய தடுப்பணையை பொதுப்பணித்துறையினர் கட்டினர்.

இந்த தடுப்பணை கட்டிமுடித்த பின்பு திரளி கண்மாய் தடுப்பணையால் பாதிக்கப்படுவதாக கூறி திரளி கிராம விவசாயிகள் மறியல் நடத்தினர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணும்படி விவசாயிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர். இந்த நிலையில் தற்போது இந்த தடுப்பணை திடீரென இடிந்துள்ளது. இதனால் தங்களது கிராமப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என நடுவக்கோட்டை பகுதி விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணை 6 மாதத்தில் இடிந்தது எப்படி என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறவேண்டிய பொதுப்பணித்துறையினர் மற்றும் ஊரகவளர்ச்சி துறையினர் மவுனம் காப்பதால் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நடுவக்கோட்டை விவசாயிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: