அதிமுக எம்எல்ஏ பேட்டி பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை

மதுரை: பாஜவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என மதுரை அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறினார். மதுரை, செல்லூர் அகிம்சாபுரத்தில் 30 லட்சம் மதிப்புள்ள பேவர் பிளாக் சாலையை, மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவசியம் அதிமுகவுக்கு இல்லை. பாஜவுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பும் இல்லை. கூட்டணி குறித்த முடிவு தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும். கஜா புயலுக்கு தேவையான நிதியை மத்திய அரசு விரைந்து ஒதுக்க வேண்டும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி நிவாரண நிதி ஒதுக்காத பட்சத்தில் போராட்டம் எல்லாம் நடத்த மாட்டோம்.  நீதிமன்றம் செல்லவும் தயங்க மாட்டோம்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: