தினகரனை தவிர்த்து அதிமுக-விலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் வாருங்கள்... ஏற்கிறோம் : முதல்வர் பகிரங்க அழைப்பு

சேலம்: அமமுக-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுக-விற்கு மீண்டும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க.வில் இருந்து ஒரு சிலர் விலகி வேறு கட்சிக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது அவர்களது விருப்பம். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதையே தான் தற்போதும் நான் கூறுகிறேன். டிடிவி தினகரனை தவிர்த்து மற்ற அனைவரும் தாய் கழகமான அதிமுக-விற்கு திரும்பலாம். அவர்களை கட்சியில் மீண்டும் இணைத்து கொள்ள தலைமை தயாராக உள்ளதாக கூறினார்.

சமீபத்தில் அ.ம.மு.க விலிருந்து வந்தவர்கள் எனது முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. தினகரனை தவிர அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம். அவர்கள் உரிய மரியாதையுடன் அ.தி.மு.க.வில் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்றார். மேலும் பேசிய அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு செய்து வருகிறது. நிவாரணத் தொகை உரியவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்றார். மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது தொடர்பாக பதில் நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: