சறுக்கலை சரி செய்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும்: தமிழிசை

சென்னை: சறுக்கலை சரி செய்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. அதில், தெலங்கானா மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக-விடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்துள்ளது.  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், சறுக்கலை சரி செய்து 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக-விற்கு கிடைத்தது வெற்றிகரமான தோல்வி என நான் கூறியது விவாதமாக்கப்பட்டு விட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ்-பாஜக இடையேயான ஓட்டு சதவீதம் குறைவானதே. சறுக்கலை சரி செய்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: