ஒரு நாள் இரவுக்கு 2 லட்சம் தருகிறேன் டிவி நடிகைக்கு பேஸ்புக்கில் வாலிபர் ஆபாச அழைப்பு

திருவனந்தபுரம்: கேரள டிவி நடிகை ஒரு நாள் இரவு தன்னுடன் தங்க 2 லட்சம் தருவதாக கூறி பேஸ்புக்கில் வாலிபர் அழைப்பு விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபருக்கு நடிகை தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். சினிமா மற்றும் டிவி நடிகைகளின் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளில் ஆபாச கருத்துகள் வெளியிடப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கேரள முன்னணி டிவி நடிகை ஒருவரின் பேஸ்புக் கணக்கில் ஒருவர் ஆபாச அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள டிவி தொடர்களின் முன்னணி நடிகையாக இருப்பவர் காயத்திரி அருண். இவர் ஏராளமான டிவி தொடர்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் இவரது பேஸ்புக் கணக்கில் ஒருவர் ஒரு கருத்து வெளியிட்டிருந்தார். அதில் ஒரு இரவு என்னுடன் தங்க 2 லட்சம் தர தயாராக இருக்கிறேன் என அழைப்பு விடுத்திருந்தார். இதை பார்த்த காயத்திரி அந்த நபருக்கு பதில் அளித்துள்ளார். அதில், உங்களது தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும்போது கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். அதோடு அந்த நபரின் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: