அரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 1 லட்சம் அபேஸ்: 4 பெண்கள் பிடிபட்டனர்

சென்னை: சென்னை அடுத்த மதுராந்தகம் பொலம்பாக்கம் முத்துமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி சுபா (30). இவர், நேற்று முன்தினம் மதுராந்தகம் தனியார் நிறுவனத்தில் நகை அடகு வைத்திருந்தார். அதை மீட்க 1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அரசு பஸ்சில் மதுராந்தகம் வந்தார். மதுராந்தகம் நகரில் இறங்கியதும் தான் பையில் வைத்திருந்த 1 லட்சம் பணம் காணாமல் போனது. சுபா மதுராந்தகம் காவல் நிலையத்திப் புகார் செய்தார். விசாரணையில் சுபா தனது அருகில்  இருந்த பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரது கையில் ஒரு தழும்பு இருந்ததாகவும் கூறினார்.

எனவே, சுபாவை அழைத்துக்கொண்டு மதுராந்தகம் பேருந்து நிலையம் வந்தனர். அங்கு ஆட்டோவில் ஏற இருந்த பெண்ணை காட்டினார். உடனே போலீசார் அப்பெண்ணை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் மதுரை வண்டியூர் அடுத்த அயோத்திபட்டினம் பகுதியை சேர்ந்த அபிராமி (28) என்பது தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் கல்யாணி (35), அனிதா (42), உஷா (48) என மேலும் 3 பெண்களை பிடித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 1 லட்சம் பணம் மீட்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: