தாம்பரம் பகுதியில் விற்பதற்காக பதுக்கல் குடோனில் 2 டன் குட்கா பறிமுதல்

தாம்பரம்: தாம்பரம் பகுதிகளில், குட்கா பதுக்கிவைத்து விற்கப்பட்டு வருவதாக மாநகர இணை ஆணையரின் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தாம்பரம் அடுத்த மகாலட்சுமி நகர், காமராஜர் தெருவை சேர்ந்த முருகன் (28) என்பவரை பிடித்து விசாரித்ததில் தாம்பரம் ரத்தினமங்கத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் அதிக அளவில் பதுக்கி விற்கப்பட்டு வந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு  போலீசார் ரத்தினமங்கம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்து பார்த்தபோது அங்கு 4 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அதை பறிமுதல் செய்து குடோனில் இருந்த ரத்தினமங்கலம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்த திவாகர் (23) என்பவரையும் பிடித்து சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் இருவரும் குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி ரத்தினமங்கம் கொண்டு வந்து வண்டலூர், கேளம்பாக்கம், மாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் விநியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: