தோவாளை சந்தையில் குறைந்தது வரத்து : பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

குமரி; கடும் பனிப்பொழிவு காரணமாக குமரி தோவாளை மலர் சந்தைகளில் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தை மிகவும் புகழ் பெற்றது. அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. கிலோ ரூ.400-க்கு விற்பனையான மல்லிகை ரூ.2500-ஆக எகிறியுள்ளது. கிலோ ரூ.500-ஆக இருந்த பிச்சிப்பூவின் விலை ரூ.1,700-ஆக விற்பனையாகிறது.

கனகாம்பரம் ரூ.1250-க்கும், முல்லை பூ ரூ.450-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒசூர், பெங்களூரு, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் கிலோ கணக்கில் மட்டுமே வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். வாடிக்கையாளர்கள் கூறுகையில் சீசன் சரியில்லாததால் பூக்களும் சரியாக இல்லை. மிகவும் சிறயிதாக காணப்படுவதாக கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: