ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: புஜாரா 4-வது இடத்திற்கு முன்னேற்றம்..விராட் கோலி தொடர்ந்து முதல் இடம்

துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் 123, 71 என ஒரே டெஸ்ட்டில் 194 ரன்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புஜாரா 846 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 913 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளி மைல்கல்லைக் கடந்த முதல் நியூஸிலாந்து பேட்ஸ்மென் வில்லியம்சன் ஆவார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பெரிய அளவில் ரன் அடிக்காவிட்டாலும் 920 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். கோலிக்கும் வில்லியம்சனுக்கும் 7 புள்ளிகள் மட்டுமே வித்யாசம் இருப்பதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லையெனில் முதல் இடத்தை இழக்கும் நிலையில் விராட் கோலி உள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 807 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், டேவிட் வார்னர் 795 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ரஹானே 2 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்தார்.

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை 882 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபடா முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 874 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதே போல் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 இடங்கள் முன்னேறி 33-வது இடத்தை பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசை பொறுத்தவரை சகிப் உல் ஹசன் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 392 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: