தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரனுக்கு 288 உயர்வு

சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் அதிரடியாக சவரனுக்கு ₹288 உயர்ந்தது. மாலையில் சற்று விலை குறைந்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ₹3,004க்கும், சவரன் ₹24,032க்கும் விற்கப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ₹36 உயர்ந்து ஒரு கிராம் ₹3,040க்கும்,  சவரனுக்கு ₹288 உயர்ந்து ஒரு சவரன் ₹24,320க்கும் விற்கப்பட்டது.

இந்த விலை  மாலையில் சற்று குறைந்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ₹20 உயர்ந்து ஒரு கிராம் ₹3024க்கும், சவரனுக்கு ₹160 உயர்ந்து ஒரு சவரன் ₹24,192க்கும் விற்கப்பட்டது. காலையில் கிடு,கிடுவென  உயர்ந்த தங்கம் மாலையில் சற்று குறைந்தது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. இதுகுறித்து  சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், “ இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமாவால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் 5 மாநில  தேர்தல் முடிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இதே நிலை தான் நீடிக்கும்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: