ரூபாய் மதிப்பு 110 காசு சரிவு

மும்பை: கடந்த சில நாளாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஏதோ நான்கு, ஐந்து காசு என்று தான் சரிந்தது. சற்று மதிப்பு கூடும் அளவுக்கு நிலைமை மாறியது. ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் திடீரென  விலகியதால் ரூபாய் மதிப்பும் பெரும் சரிவு கண்டது.

 நேற்று ஒரே நாளில் 110 காசு சரிந்து 72.42 என்று ரூபாய் மதிப்பு காணப்பட்டது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 71.32 என்று இருந்தது. நேற்று ஆரம்பத்தில் இருந்தே ரூபாய் மதிப்பு சற்று தள்ளாடியது. நேற்று  முன்தினம் உர்ஜித் ராஜினாமா காரணம் என்றால், நேற்று ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் சந்தையை வெகுவாக பாதித்தது. அதனால் தான் ரூபாய் மதிப்பு 110 காசு சரிந்தது என்று நிதி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  ரூபாய் மதிப்பு சரிவு, தங்கம் விலை ஏற்றம், பங்குச்சந்தை சரிவு ஆகியவற்றை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் பெரிதாக மாற்றம் இல்லை என்றாலும், அடுத்து வரும் நாட்களில் பெட்ரோலிய பொருட்கள்  விலை இதே நிலையில் நீடிக்குமா என்பதும் கேள்விக்குறி தான் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வர்த்தக இடையில் பெரும் சரிவை சந்தித்தாலும் முடிவில் ரூபாய் சற்று வலுப்பெற்று, முந்தைய நாளை விட 53 காசு  குறைந்து ₹71.85 என நிலைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: