டோனியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்... ரிஷப் பன்ட் உற்சாகம்

பெர்த்: அடிலெய்டு டெஸ்டில் 11 கேட்ச் பிடித்து உலக சாதனையை சமன் செய்த இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், அனுபவ வீரர் எம்.எஸ்.டோனியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். இது குறித்து பெர்த்தில் நேற்று அவர் கூறியதாவது: நாட்டின் கதாநாயகன் டோனி என்றால் மிகையாகாது. அவரிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனிதராகவும் எனக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் அருகில் இருக்கும்போது தன்னம்பிக்கை தானாகவே அதிகரிக்கும். எந்த ஒரு பிரச்னை என்றாலும் அவரிடம் சென்றால் உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும்.

விக்கெட் கீப்பராக செயல்படும்போது பொறுமை மிகவும் அவசியம் என வலியுறுத்துவார். அடிலெய்டு டெஸ்டில் பதற்றமான சூழ்நிலைகளை சமாளிக்க, அவரிடம் கற்ற அனுபவப் பாடம் பெரிதும் உதவியாக இருந்தது.  பொறுமையாக, பதற்றம் அடையாமல் இருப்பது மட்டுமல்ல... எப்போதும் நூறு சதவீத பங்களிப்பை வழங்கவேண்டும் என்பார். அதிக கேட்ச் பிடித்து உலக சாதனையை சமன் செய்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. சாதனை மைல்கற்களை எட்டுவது சிறப்பானது என்றாலும் அதை பற்றி அதிகம் நினைப்பதில்லை. இவ்வாறு பன்ட் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: