ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவானது இப்பருவகாலத்தில் ஏற்பட்ட முதல் கடுமையான பனிப்பொழிவு என பதிவு செய்யப்பட்டுள்ளது. முகல் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பனிப்பொழிவால் சாலைகளும் மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பிர் பஞ்சால் மலைத்தொடர் பகுதியில் நேற்று மிதமான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அதனை ரசித்தபடி வலம் வந்தனர். ஆனால் இன்று அப்பகுதியிலும் கடும் பனி பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மூடப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை மற்றும் முகல் சாலை ஆகிய இடங்களிலும் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலையானது 1.6 டிகிரியாக பதிவானது. பகல்கம் நகரில் -2 டிகிரியாகவும், குல்மார்க்கில் -7.6 டிகிரியாகவும் இருந்தது. லடாக் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை -7.3 டிகிரி செல்சியசாக பதிவானது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: