மத்திய பிரதேச மாநில தேர்தலில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற நோட்டா!

போபால்: மத்திய பிரதேச தேர்தலில் நோட்டாவுக்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருப்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாவட்டங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இங்கு நேரடி போட்டி நிலவி வருகிறது.

ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இதுவரை எந்த ஒரு கட்சியும் தனி மெஜாரிட்டி பெறவில்லை. காங்கிரஸ் கட்சி 109 இடங்களிலும், பாஜக 107 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 116 இடங்களை எந்த கட்சியும் எட்டாத நிலையில், 7 இடங்களில் முன்னிலையில் இருக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே, யாருக்கு ஆதரவு ஆதரவளித்து ஆட்சியில் அமர்த்தும் என்பதை தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளைவிட அதிக வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்துள்ளன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 1.5 மில்லியன்(1.5%) வாக்குகளை நோட்டா பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: