ஆஸ்திரேலியா பிக் பேஷ் டி20 லீக்: டாசில் head or Tail கிடையாது... இனி Hills or Flat

பிரிஸ்பேன்: இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 தொடரை போல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிக் பேஷ் (Big Bash) டி20 லீக் தொடர் மிகவும் பிரபலம். ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இந்த டி20 தொடர் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. பொதுவாக கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன்பு நாணயம் மூலம் டாஸ் போடப்படும். டாஸ் வெல்லும் அணி பேட்டிங் அல்லது பந்து வீச்சை தேர்வு செய்யும்.

இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள பிக் பேஷ் தொடரில் நாணயம் மூலம் டாஸ் போடுவதற்கு பதிலாக கிரிக்கெட் பேட்டை கொண்டு பேட்டிங் அல்லது பந்து வீச்சை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது நாணயம் மூலம் டாஸ் போட்டு ஹெட் (Head) அல்லது டெயில் (Tail) என்பதற்கு பதில் பேட்டை தூக்கி போட்டு ஹில்ஸ் (Hills) அல்லது ஃபிளாட் (Flat) என்று கூறும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக தனித்துவமான முறையில் தயார் செய்யப்பட்ட பேட்டை பயன்படுத்த உள்ளனர். வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் (Adelaide Strikers) அணிகளுக்கு எதிரான முதல் போட்டியில் இந்த முறை அறிமுகப்படுத்தபட இருக்கிறது. டாஸ் போடும் போது ஹெட் விழுந்ததா அல்லது டெயில் விழுந்ததா என்பது ரசிகர்களுக்கு தெளிவாக தெரியாத காரணத்தால் இந்த புதிய முறை கடைபிடிக்க முடிவு செய்துள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் ஸ்டம்பின் மேல் வைக்கப்படும் பெய்ல்ஸ் (Bails) மரக்கட்டை மூலம் செய்யப்படுவது வழக்கம். இதை வித்தியாசமான முறையில் காட்டுவதற்காக பிக் பேஷ் தொடரில், பெய்ல்ஸ் மீது பந்து மற்றும் எதாவது பொருள் படும் போது லைட் எரியும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. பிற்காலத்தில் சர்வதேச போட்டியிலும் இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: