அண்டார்டிகா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு

அண்டார்டிகா: வடக்கு அண்டார்டிகாவில் உள்ள தென் சாண்ட்விட்ச் தீவுகளுக்கு அருகே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. அண்டார்டிகாவில் அமைந்துள்ள பிரிட்டன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சாண்ட்விட்ச் தீவுகளுக்கு அருகே பூமிக்கடியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 176 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: