சில்லி பாயின்ட்...

* அடிலெய்டு டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ‘2003ம் ஆண்டு நமக்கு கிடைத்த வெற்றியின் நினைவுகளை மீண்டும் மலரச் செய்துவிட்டது உங்கள் சாதனை’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டியில் ராகுல் டிராவிட்டின் அசத்தலான பேட்டிங் மற்றும் அஜித் அகர்கரின் அமர்க்களமான பந்துவீச்சால் இந்தியா வெற்றியை வசப்படுத்தியது. வீரேந்திர சேவக் உட்பட முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

* உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் ஏ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கடுமையான சவாலை எதிர்கொள்கிறார். நடப்பு சாம்பியன் அகானே யாமகுச்சி (ஜப்பான்), உலகின் நம்பர் 1 வீராங்கனை டாய் ட்ஸூ யிங் (சீன தைபே), பெய்வன் ஸாங் (அமெரிக்கா) ஆகியோருடன் பி.வி.சிந்து மோதவுள்ளார்.

* ஆசிய கான்டினென்டல் செஸ் போட்டியில் விளையாடுவதற்காக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள இந்திய வீரர்கள் விதித் குஜ்ராதி, அபிஜித் குன்டே, லலித் பாபு ஆகியோர் மகாதி நகர மார்கெட்டில் ஷாப்பிங் சென்றபோது, உள்ளூர் ரவுடிகள் சிலர் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* மும்பை அணியுடன் 14ம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்துக்கான பரோடா அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியே

சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, அவரது உடல்தகுதியை நிரூபிக்கும் வகையில் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

* ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில் இனி நாணயத்தை சுண்டி டாஸ் போடுவதற்கு பதிலாக கிரிக்கெட் மட்டையை சுழற்றி டாஸ் போடும் முறையை அறிமுகம் செய்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: