உலக கோப்பை ஹாக்கி: கால் இறுதியில் ஜெர்மனி

ஜெர்மனியின் மார்கோ மிக்காவ் 39வது நிமிடத்தில் கோல் போட அந்த அணி 4-2 என முன்னிலையை அதிகரித்தது. விடாப்பிடியாகப் போராடிய மலேசியா 42வது நிமிடத்தில் அப்துல் ரகிம் மீண்டும் கோல் அடிக்க 4-3 என நெருங்கியது. எனினும், 59வது நிமிடத்தில் டிம் ஹெர்ஸ்ப்ருச் தனது 2வது கோலை அடித்து அசத்த, ஜெர்மனி 5-3 என்ற கணக்கில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தி 9 புள்ளிகளுடன் டி பிரிவில் இருந்து நேரடியாக கால் இறுதிக்கு முன்னேறியது. டி பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து 5-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. இந்த பிரிவில் நெதர்லாந்து (6), பாகிஸ்தான் (1) அணிகள் கிராஸ்ஓவர் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், மலேசியா (1) வெளியேற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: