நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் - நவம்பர்

நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் முழுவதும் நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக (Lung Cancer Awareness Month) அனுசரிக்கப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய் என்பது அதிகளவு புகைப்பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் ஏற்படுகிறது.

அதிகளவு புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவது நுரையீரலை பாதித்து நாளடைவில் புற்றுநோயாக மாறிவிடும்.

நுரையீரல் புற்றுநோய் ஏற்பட ரேடான் வாயு, காற்று மாசுபாடு, மரபணுக்களில் இருந்து பல காரணங்கள் உள்ளது. ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்துவிட்டால் இதனை குணப்படுத்துவது எளிது. எனவே, நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணங்கள் அதன் வகைகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகளை தெரிந்துகொள்வது இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதற்கு உதவியாக இருக்கும்.

நோய் அறிகுறிகள்

தொடர்ந்து இருமல், இருமலின்போது ரத்தம் வருதல், மார்புவலி, திடீரென ஏற்படும் எடை இழப்பு அல்லது அதிகளவு சோர்வு, சுவாசக் கோளாறுகள் போன்ற ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.மற்ற நோய்களுக்காக கதிரியக்க சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெண்களை பொறுத்தவரையில் மார்பக புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

சமையலறை புகைகூட நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் 3 பில்லியன் மக்கள் சமையலறையில் புகையில் கஷ்டப்படுகின்றனர். குறைந்த காற்றோட்டம் கொண்ட சூழ்நிலையில் சமைக்கும்போது அந்த எரிபொருளின் புகை நுரையீரலை பாதிக்கக்கூடும். இதனால் பாதிக்கப்படுவதில் அதிகம்பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளாக உள்ளனர். குறிப்பாக சீனாவின் கிராமப்புறத்தில் உள்ள பெண்கள் பலரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொகுப்பு: க.கதிரவன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: